Shanmugan Murugavel / 2016 ஜனவரி 10 , மு.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நோவாக் ஜோகோவிக், உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலைத் தோற்கடித்து, இவ்வருடத்தின் முதலாவது பட்டமாக, கட்டார் பகிரங்கப் பட்டத்தை கைப்பற்றினார்.
எழுபத்து மூன்று நிமிடங்கள் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில், 6-1, 6-2 என்ற நேர் செட்களில் 29 வயதான நடாலை, 28 வயதான ஜோகோவிக் தோற்கடித்தார்.
நடாலுடன் இறுதியாக விளையாடிய பத்து போட்டிகளில், ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகின்ற ஜோகோவிக், இருவருக்குமிடையிலான 47 போட்டிகளில் 24 தடவை வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்ற நிலையில், நடால் 23 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த வருட கட்டார் பகிரங்கத் தொடரின் காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தளுவி வெளியேறிய பின், தான் பங்கேற்ற அனைத்துத் தொடர்களின் இறுதிப்போட்டிக்கும் ஜோகோவிக் வந்தமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
32 minute ago