Editorial / 2018 ஜூன் 11 , பி.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் வென்றுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இப்பந்தயத்தில் முதலாவது நிலையிலிருந்து ஆரம்பித்து முதலாவது வளைவிலேயே முன்னிலையைப் பெற்ற வெட்டல், பந்தயம் முழுவதும் மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸை குறுகிய இடைவெளியில் பின்னால் கொண்டிருந்தபோதும் அவரை முந்த விடாமல் வெற்றிபெற்றார்.
அந்தவகையில், போத்தாஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், போத்தாஸை பந்தயத்தின் முதலிரு வளைவுகளிலும் முந்த முயன்ற றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் நான்காவதாக பந்தயத்தை ஆரம்பித்தபோதும் ஐந்தாமிடத்தையே பெற்றார். நடப்பு போர்மியுலா வண் சம்பியனான ஹமில்டன், இயந்திரத்தின் வெப்பநிலைகள் அதிகரித்தமை காரணமாக பந்தயத்தின் முதலாவது பகுதியில் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்ததன் காரணமாக காரை மேலும் குளிர்விப்பதற்காக, திட்டமிடப்பட்டதுக்கு முன்பதாகவே டயர்களை மாற்ற வேண்டியிருந்தது. அந்தவகையிலேயே, றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டானியல் றிச்சியார்டோவிடம் நான்காமிடத்தை ஹமில்டன் இழந்திருந்தார்.
இதேவேளை, பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன் டயர் மாற்றி வரும்போது ஹமில்டனுடன் சமமாக வந்தபோதும் அவரை முந்த விடாம் செய்து ஐந்தாமிடத்தை ஹமில்டன் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இந்த வெற்றியுடன் இவாண்டுக்கான போர்மியுலா வண் சம்பின்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 121 புள்ளிகளைப் பெற்றுள்ள வெட்டல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். வெட்டலை விட ஒரு புள்ளி குறைவாக 120 புள்ளிகளைப் பெற்றுள்ள ஹமில்டன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார்.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago