Freelancer / 2021 ஜூலை 31 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் சபை, இன்று (31) தெரிவித்தது.
கடந்த வாரம் (28) கொழும்பு ஆர்.பிரோமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான 2ஆவது இருபதுக்கு இருபது போட்டியே இலங்கை அணிக்காக இசுரு உதான விளையாடிய கடைசி போட்டியாகும்.
33 வயதான இசுரு உதான, 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலகக்கிண்ணப் போட்டியில் அறிமுகமானார்.
அந்தத்தொடரில் இறுதிப் போட்டி உட்பட 5 போட்டிகளில் விளையாடிய அவர், 2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமாயிருந்தார்.
இலங்கை அணிக்காக 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய உதான, 1 அரைசதத்துடன் மொத்தம் 237 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 78 ஓட்டங்கள் எடுத்துள்ளார், பந்து வீச்சில் 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்..
35 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடிய அவர், 1 அரைசதத்துடன் மொத்தம் 256 ஓட்டங்கள் எடுத்துள்ளார், அதிகபட்சமாக 84 ஓட்டங்கள் எடுத்துள்ளார், பந்து வீச்சில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 15 ஓட்டங்கள் எடுத்துள்ளதுடன், 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
39 minute ago
48 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
48 minute ago
52 minute ago
1 hours ago