Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 24 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெற்றுள்ளது.
சல்வடோரில் இன்று அதிகாலை இடம்பெற்ற பராகுவேயுடனான குழு பி போட்டியில் கொலம்பியா வென்றதுடன், போர்டீ அலெக்ரியில் இன்று அதிகாலை தமது குழு பி போட்டியொன்றில் கட்டாரை ஆர்ஜென்டீனா வென்ற நிலையிலேயே காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.
கட்டாருடனான போட்டியில் அதன் பின்களவீரரான பஸாம் அல்-றாவி தவறாக வழங்கிய பந்துப் பரிமாற்றம் காரணமாக தமது முன்களவீரரான லோட்டரோ மார்ட்டின்ஸ் போட்டியின் நான்காவது நிமிடத்தில் பெற்ற கோல் காரணமாக ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற ஆர்ஜென்டீனா, 82ஆவது நிமிடத்தில் தமது முன்களவீரர் சேர்ஜியோ அகுரோ பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அந்தவகையில், மர்க்கானாவில் இலங்கை நேரப்படி எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு இடம்பெறவுள்ள தமது காலிறுதிப் போட்டியில் வெனிசுவேலாவை ஆர்ஜென்டீனா எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், பராகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற கொலம்பியா, குழு பியின் அனைத்துப் போட்டிகளிலும் வென்று குழு பியின் வெற்றியாளர்களாக காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago