Shanmugan Murugavel / 2015 நவம்பர் 08 , மு.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சச்சின் டென்டுல்கர் தலைமையிலான சச்சின்ஸ் பிளாஸ்டர்ஸ் அணிக்கும் ஷேன் வோண் தலைமையிலான வோண்ஸ் வொரியர்ஸ் அணிக்குமிடையிலான இருபதுக்கு-20 போட்டியில், வோண்ஸ் வொரியர்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில், சிற்றி பீல்ட் பேஸ்போல் மைதானத்தில், இப்போட்டி இடம்பெற்றது.
இதில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சச்சின் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 85 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டன.
விரேந்தர் செவாக் 55 (22), சச்சின் டென்டுல்கர் 26 (27), மஹேல ஜெயவர்தன 18 (15) என ஓட்டங்களைப் பெற்றனர். பிரையன் லாரா 1 (8), மொய்ன் கான் 1 (2), வி.வி.எஸ் லக்ஷ்மன் 8 (9), கார்ள் கூப்பர் 11 (19), ஷோன் பொலக் 11 (9) ஆகியோர் பிரகாசிக்கத் தவறினர்.
பந்துவீச்சில், ஷேன் வோண், அன்ட்ரூ சைமன்ட்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் அலன் டொனால்ட், டானியல் விற்றோரி இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிய வோண்ஸ் வொரியர்ஸ் அணி, றிக்கி பொன்டிங், குமார் சங்கக்கார, ஜொன்டி றோட்ஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் துணையுடன் 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.
றிக்கி பொன்டிங் ஆட்டமிழக்காமல் 48 (38), குமார் சங்கக்கார 41 (29), ஜொன்டி றோட்ஸ் ஆட்டமிழக்காமல் 20 (14) ஓட்டங்களைப் பெற்றனர். ஜக்ஸ் கலிஸ் 13 (12), அன்ட்ரூ சைமன்ட்ஸ் 1 (7) ஆகியோர் பிரகாசிக்கத் தவறினர்.
பந்துவீச்சில், மிகுந்த வேகமாகப் பந்துவீசிய ஷொய்ப் அக்தர், 2 விக்கெட்டுகளையும், கட்டுப்பாடாகப் பந்துவீசிய முத்தையா முரளிதரன், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, ஷேன் வோண் தெரிவானார்.
3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில், வோண்ஸ் வொரியர்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அடுத்த போட்டி, எதிர்வரும் புதன்கிழமையன்று இடம்பெறவுள்ளது.
5 minute ago
31 minute ago
41 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
31 minute ago
41 minute ago
44 minute ago