Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சண்றைசர்ஸ், ட்ரெண்ட் போல்ட் (4), தீபக் சஹர் (2), ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ராவிடம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் ஹென்றிச் கிளாசென் 71 (44), அபினவ் மனோகர் 43 (37) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 144 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை, றோஹித் ஷர்மாவின் 70 (46), சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 40 (19) ஓட்டங்களோடு 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 3-0-25-1, ஹர்ஷால் பட்டேல் 3-0-21-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக போல்ட் தெரிவானார்.
19 minute ago
24 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
43 minute ago