Shanmugan Murugavel / 2021 ஜூன் 09 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், சிலியில் இன்று காலை நடைபெற்ற அவ்வணிக்கும், பொலிவியாவுக்குமிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
சிலி சார்பாகப் பெறப்பட்ட கோலை எரிக் புல்கர் பெற்றதோடு, பொலிவியா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்செலோ மொரேனோ பெற்றிருந்தார்.
இதேவேளை, வெனிசுவேலாவில் நடைபெற்ற அவ்வணிக்கும், உருகுவேக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில், கொலம்பியாவில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்ஜென்டீனாவுக்குமிடையிலான போட்டியானது, 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஆர்ஜென்டீனா சார்பாக, கிறிஸ்டியன் றொமேறோ, லியன்ட்ரோ பரெடெஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கொலம்பியா சார்பாக, லூயிஸ் முரியெல், மிகேல் பொர்ஜா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
13 minute ago
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
19 Apr 2026