Shanmugan Murugavel / 2021 நவம்பர் 15 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், மொன்ரனீக்ரோவில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான குழு ஜி போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
நெதர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோல்கள் இரண்டையும் மெம்பிஸ் டிபே பெற்றிருந்தார். மொன்ரனீக்ரோ சார்பாக, லிலிஜா வுகோடிச், நிகொலா வுஜ்னோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறுவதற்கு எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நோர்வேக்கெதிரான போட்டியில் தோல்வியை நெதர்லாந்து தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெல்ஜியத்தில் நடைபெற்ற எஸ்தோனியாவுடனான குழு ஈ போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றுக் கொண்டது. பெல்ஜியம் சார்பாக, கிறிஸ்டியன் பென்டெக்கே, யனிக் கராஸ்கோம், தொர்கன் ஹஸார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எஸ்தோனியா சார்பாகப் பெறப்பட்ட கோலை எரிக் சொர்கா பெற்றிருந்தார்.
இந்நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற கஸக்ஸ்தானுடனான குழு ஈ போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கில் வென்ற நடப்புச் சம்பியன்களான பிரான்ஸ், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது. பிரான்ஸ் சார்பாக, கிலியான் மப்பே நான்கு கோல்களையும், கரிம் பென்ஸீமா இரண்டு கோல்களையும், அட்ரியன் றபியொட், அந்தோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
36 minute ago
2 hours ago
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
25 Jan 2026