Editorial / 2018 நவம்பர் 22 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக்கில், போர்த்துக்கல்லில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற போர்த்துக்கல், போலந்து அணிகளுக்கிடையிலான குழு ஏ3 போட்டியொன்று சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியின் 33ஆவது நிமிடத்தில், சக முன்கள வீரர் றெனட்டோ சந்தேஸிடமிருந்து வந்த மூலையுதையை போர்த்துக்கல்லின் அன்ட்ரே சில்வா தலையால் முட்டிக் கோலாக்கு முன்னிலையை வழங்கினார். எனினும் போட்டியின் 63ஆவது நிமிடத்தில் போலந்தின் முன்கள வீரர் அர்கடியுஸ் மிலிக்கை பெனால்டி பகுதிக்குள் வைத்து வீழ்த்திய போர்த்துக்கல்லின் பின்கள வீரர் சிவப்பு அட்டை காட்டப் பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துக்கு வழங்கப்பட்ட பெனால்டியை மிலிக் கோலாக்க 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி இறுதியில் சமநிலையில் முடிவடைந்தது.
11 minute ago
41 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
41 minute ago
1 hours ago
3 hours ago