2025 ஜூன் 28, சனிக்கிழமை

சமநிலையில் மிலன் – கைகரி போட்டி

Shanmugan Murugavel   / 2021 மே 17 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஏ.சி மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், கைகரிக்குமிடையிலான போட்டியானது, 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

அந்தவகையில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில், 88 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சம்பியனான இன்டர் மிலன் காணப்படுகின்றது. 78 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லாண்டாவும், 76 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நாப்போலியும், அதே புள்ளிகளுடன் ஆனால் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் நான்காமிடத்தில் ஏ.சி மிலன் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .