Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், சென். பெளலியின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயெர் லெவர்குசன் சமப்படுத்தியது.
லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை பற்றிக் ஸ்சிச் பெற்றதோடு, பெளலி சார்பாகப் பெறப்பட்ட கோலை கார்லோ பூகாலிபாவும் பெற்றிருந்தனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பொரூசியா மொச்சென்கிளெட்பாவுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றது.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 72 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயேர்ண் மியூனிச் காணப்படுகின்றது. 64 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லெவர்குசனும், 52 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஐன்ரச்ட் பிராங்ஃபேர்ட்டும், 49 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கும் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
1 hours ago
2 hours ago