Shanmugan Murugavel / 2026 மார்ச் 18 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் சிற்றி, செல்சி ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த சிற்றி, தமது மைதானத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து 1-5 என்ற மொத்த கோல் கணக்கில் தொடரிலிருந்து வெளியேறியது.
மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வினிஷியஸ் ஜூனியர் பெற்றதோடு, சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை எர்லிங் ஹலான்ட் பெற்றிருந்தார்.
இதேவேளை நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்ற செல்சி, தமது மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றமையைத் தொடர்ந்தே 2-8 என்ற மொத்த கோல் கணக்கில் தொடரிலிருந்து வெளியேறியது. பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக கிவிச்சா கவர்செலியா, பிராட்லி பார்கொலா, சென்னி மயிலு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026