Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கிலிருந்து இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.
துருக்கியக் கழகமான கலடசரேயிடம் தகுதிகாண் போட்டியில் தோற்றே தொடரிலிருந்து ஜுவென்டஸ் வெளியேறியிருந்தது. கலடசரேயின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த ஜுவென்டஸ், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியின் வழமையான நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று 5-5 என்ற மொத்த கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டது.
எனினும் மேலதிக நேரத்தில் கலடசரேயால் இரண்டு கோல்கள் பெறப்பட 3-2 என்ற கோல் கணக்கில் இச்சுற்றை ஜுவென்டஸ் வென்றபோதும், 5-7 என்ற மொத்த கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
ஜுவென்டஸ் சார்பாக மனுவல் லொகடெல்லி, பெடெரிக்கோ கட்டி, வெஸ்டன் மக்கென்னி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கலடசரே சார்பாக விக்டர் ஒஸிம்ஹென், பரிஸ் அல்பர் யில்மாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற இன்னொரு சீரி ஏ கழகமான அத்லாண்டாவுடனான முதலாவது சுற்று தகுதிகாண் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற டொட்டமுண்ட், அத்லாண்டாவின் மைதானத்தில் புதன்கிழமை (25) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் இறுதி நிமிடத்தில் பெறப்பட்ட பெனால்டியால் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து 3-4 என்ற மொத்த கோல் கணக்கில் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது.
அத்லாண்டா சார்பாக ஜலூக்கா ஸமாக்கா, டேவிட் ஸபகொஸ்டா, மரியோ பஸ்காலிச், லஸார் சமரிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரிம் அடெயெமி பெற்றிருந்தார்.
இதேவேளை சக பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று தகுதிகாண் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன், தமது மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தி 5-4 என்ற மொத்த கோல் அடிப்படையில் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக மார்க்குய்ன்ஹாஸ், கிவிச்சா கவசெலியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மொனாக்கோ சார்பாக மக்னஸ் அக்லியோச்சே, ஜோர்டான் டெஸே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago