Shanmugan Murugavel / 2021 மே 12 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியுள்ளது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்தில் காணப்படும் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், லெய்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, கடந்த நான்கு பருவகாலங்களில் மூன்றாவது தடவையாக சிற்றி சம்பியனாகியுள்ளது.
ஏனெனில், இன்னும் மூன்று போட்டிகள் காணப்படுகின்ற நிலையில் தற்போது 70 புள்ளிகளைப் பெற்றுள்ள யுனைட்டெட், மூன்றிலும் வென்றாலும் 79 புள்ளிகளையே பெறலாமென்ற நிலையில், சிற்றி 80 புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டியில் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மேஸன் கிறீன்வூட் பெற்றதோடு, லெய்செஸ்டர் சார்பாக, லுக் தோமஸ், கக்லர் சொயுன்சு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago