2025 ஜூன் 28, சனிக்கிழமை

சம்பியனான அத்லெட்டிகோ

Shanmugan Murugavel   / 2021 மே 23 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில் அத்லெட்டிகோ மட்ரிட் சம்பியனாகியுள்ளது.

றியல் வல்லடொலிட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதைத் தொடர்ந்தே அத்லெட்டிகோ சம்பியனாயிருந்தது.

குறித்த போட்டியில் வெற்றியுடன் லா லிகா புள்ளிகள் பட்டியலில் 86 புள்ளிகளை அத்லெட்டிகோ அடைந்த நிலையில், இரண்டாமிடத்திலுள்ள றியல் மட்ரிட் 84 புள்ளிகளையே பெற்றிருந்தது.

இப்போட்டியில் அத்லெட்டிகோ சார்பாக, ஏஞ்சல் கொரேரா, லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, வல்லடொலிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒஸ்கார் பிளானோ பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .