Shanmugan Murugavel / 2021 ஜூன் 14 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்று வந்த பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் சம்பியனானார்.
நேற்று நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், உலகின் தற்போதைய நான்காம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸை 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சேர்பியாவின் ஜோக்கோவிச் சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடாலை 3-6, 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு ஜோக்கோவிச் தகுதி பெற்றிருந்தார்.
இதேவேளை, தனது அரையிறுதிப் போட்டியில் உலகின் ஆறாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை, 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு சிட்டிபாஸ் தகுதி பெற்றிருந்தார்.
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago