Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 24 , பி.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் பிறீமியர் லீக்கில், இம்மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியிலேற்பட்ட கழுத்துக் காயமொன்று காரணமாக, அடுத்த மாதம் முழுவதும் இங்கிலாந்தின் கவுண்டி அணியான சரேக்காக விளையாடவிருந்ததை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி தவறவிடுகிறார்.
இந்நிலையில், அடுத்த மூன்று வாரங்களுக்கு விராத் கோலி பயிற்சியிலீடுபடமாட்டார் எனத் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடக வெளியீடொன்று, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் அடுத்த மாதம் 15ஆம் திகதியே பயிற்சிகளை ஆரம்பிப்பார் என்று கூறியுள்ளது.
பயிற்சியை ஆரம்பித்த பின்னர், இவ்வாண்டு ஜூலையில் இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முன்னர் உடற்றகுதிச் சோதனையொன்றை விராத் கோலி முகங்கொடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
மும்பையின் புறநகர்ப் பகுதியிலுள்ள எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணரொருவரை, இடுப்பென்பு கீழிறக்கத்தை எதிர்கொண்டுள்ள விராத் கோலி பார்வையிட்டுள்ளார் என முன்னர் தகவல்கள் வெளியாகிய நிலையில், அவ்வாறனதொரு பிரச்சினையில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மறுத்திருந்தது.
இந்நிலையில், இன்று காலையிலேயே விராத் கோலியின் காயம் தொடர்பாக அறிந்து கொண்டதாக சரேயின் தகவல் மூலமொன்று கூறியது குறிப்பிடத்தக்கது.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago