2021 ஜூன் 16, புதன்கிழமை

செல்சியில் அடுத்த பருவகாலத்திலும் நீடிக்கவுள்ள ஒலிவியர் ஜிரூட்

Editorial   / 2020 மே 22 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, தமது முன்களவீரர் ஒலிவியர் ஜிரூட்டின் ஒப்பந்தத்தை 12 மாதங்களால் நீடித்துள்ளது. அந்தவகையில் அடுத்த பருவகாலத்துக்கு செல்சியில் பிரான்ஸ் சர்வதேச கால்பந்தாட்ட ணியின் முன்களவீரரான ஒலிவியர் ஜிருட் தொடரவுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலிலிருந்து செல்சியில் இணைந்த 33 வயதான ஒலிவியர் ஜிரூட், 49 போட்டிகளில் விளையாடி ஏழு கோல்களைப் பெற்றுள்ளார்.

இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் ஐந்து பிறீமியர் லீக் போட்டிகளிலேயே பங்கேற்றிருந்த ஒலிவியர் ஜிரூட், அவரது ஒப்பந்தத்தின் இறுதி ஆறு மாதங்களில் காணப்பட்டிருந்தார்.

எனினும், சக முன்களவீரர் தம்மி ஏப்ரஹாமுக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து தனது மீள்வருகையில் பிரகாசித்து, நான்கு லீக் போட்டிகளில் இரண்டு கோல்களைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .