Shanmugan Murugavel / 2024 மே 07 , பி.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த பங்களாதேஷ், சட்டோகிராமில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
பங்களாதேஷ்: 165/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெளஹிட் ஹிரிடோய் 57 (38), ஜாகிர் அலி 44 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 3/14 [4])
சிம்பாப்வே: 156/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பராஸ் அக்ரம் ஆ.இ 34 (19), டடிவனஷே மருமனி 31 (26), ஜொனதன் கம்பெல் 21 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: மகமதுல்லா 1/1 [1], தஸ்கின் அஹ்மட் 1/21 [4], தன்வீர் இஸ்லாம் 1/26 [4], தன்ஸிம் ஹஸன் சகிப் 1/26 [4])
போட்டியின் நாயகன்: தெளஹிட் ஹிரிடோய்
8 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
32 minute ago