Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பாகிஸ்தானும், இரண்டாவது போட்டியை சிம்பாப்வேயும் வென்றிருந்த நிலையில், ஹராரேயில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மொஹமட் றிஸ்வானின் ஆட்டமிழக்காத 91 (60), பாபர் அஸாமின் 52 (46) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 166 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, வெஸ்லி மட்ஹெவெரேயின் 59 (47), தரிவனஷே மருமனியின் 35 (26) ஓட்டங்கள் மூலம் இனிங்ஸை நகர்த்தியபோதும், ஹஸன் அலி (4), மொஹமட் ஹஸ்னைன் (1), ஹரிஸ் றாஃப்பிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களையே பெற்று 24 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், ஹஸன் அலி, நான்கு ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மொஹமட் ஹஸ்னைன் நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாக ஹஸன் அலியும், தொடரின் நாயகனாக மொஹமட் றிஸ்வானும் தெரிவாகினர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026