Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் - 4 சுற்றுக்கு இலங்கை தகுதி பெறுவதற்கு ஆப்கானிஸ்தானுக்கெதிரான இன்றைய போட்டியில் 101 ஓட்டங்களை இலங்கை பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தாம் சுப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு இலங்கை 101 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் சுப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு கட்டாயம் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஆப்கானிஸ்தான் வென்றாலும் 101 ஓட்டங்களைப் பெற்றால் ஆப்கானிஸ்தானுடன் இலங்கையும் சுப்பர் 4 சுற்றுக்குச் செல்லும். ஆப்கானிஸ்தான் தோற்றால் இலங்கையும், பங்களாதேஷும் சுப்பர் 4 சுற்றுக்குச் செல்லும். இலங்கை 101 ஓட்டங்களைப் பெறாவிட்டால் ஆப்கானிஸ்தானும், பங்களாதேஷும் சுப்பர் 4 சுற்றுக்குச் செல்லும்.
9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026