Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜனவரி 27 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற செல்சியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாக ஜொஸ்கோ கவிரால், எர்லிங் பிறோட் ஹலான்ட், பில் பொடென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை மடுகே பெற்றார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. 47 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 44 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும் காணப்படுகின்றன. தலா 41 புள்ளிகளுடன் சிற்றியும், நியூகாசில் யுனைட்டெட்டும் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் நான்காமிடத்தில் சிற்றியும், ஐந்தாமிடத்தில் நியூகாசிலும் காணப்படுகின்றன. இதில் ஏனைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக லிவர்பூல் விளையாடியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
31 minute ago
27 Jun 2025