Shanmugan Murugavel / 2025 மார்ச் 17 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற செல்சியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிகேல் மெரினோ பெற்றிருந்தார்.
புல்ஹாமின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது. புல்ஹாம் சார்பாக றொட்றிகோ முனிஸ், றயான் செஸென்கொன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் திங்கட்கிழமை (17) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், றஸ்முஸ் ஹொஜ்லுன்ட், அலெஜான்ட்ரோ கர்னாச்சோ, புரூனோ பெர்ணாண்டஸ் ஆகியோர் பெற்ற கோல்களுடன் 3-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 58 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 54 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும், 49 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சி காணப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago