2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சான்டி கஸொர்லோ 3 மாதங்களுக்கு இல்லை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்சனல் அணியின் மத்தியகள வீரரான சான்டி கஸொர்லோ, குறைந்தது 3 மாதங்களுக்குப் போட்டிகளில் பங்குபற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நோர்விச் சிற்றி அணிக்கும் ஆர்சனல் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், 1-1 என்ற முடிவு பெறப்பட்டதோடு, அப்போட்டியிலேயே அவர் காயமடைந்திருந்தார்.

அவருக்கு ஏற்பட்ட முழங்கால் தசைநாண் உபாதையின் முழுமையான அளவு இன்னமும் வெளிப்படுத்தப்படாத நிலையில், 3 மாதங்களுக்கு அதிகமாக, அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது போகும் நிலை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்போட்டியில், ஆர்சனலின் அலெக்ஸிஸ் சான்செஸ், லோரன்ட் கொஸ்சியெல்னி ஆகியோரும் காயமடைந்திருந்தனர். அவர்களிருவருக்கும் ஏற்பட்ட உபாதை, மோசமானதாக இருக்குமென முன்னர் அஞ்சப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்டளவு மோசமானதாக அவை இல்லையெனவும், விரைவிலேயே அவர்களால் போட்டிகளில் பங்குபற்ற முடியுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .