2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

சார்ள்ட்டனின் சாதனையை சமப்படுத்தினார் றூணி

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 08 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கத் (எஃப்.ஏ) தொடரில், றீடிங் அணிக்கெதிரான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், கோலொன்றைப் பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டின் வெய்ன் றூணி, மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்காக அதிக கோல்கள் பெற்றவர் என்ற பொபி சார்ள்ட்டனின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

31 வயதான றூணி, 543 போட்டிகளில் 249 கோல்களைப் பெற்றுள்ளார். இந்த அடைவானது, சார்ள்ட்டன் எடுத்துக்கொண்ட போட்டிகளை விட 215 போட்டிகளும், நான்கு பருவங்களும் குறைவாகும்.

குறித்த போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றிபெற்றது. இதேவேளை, ஏனைய எஃப்.ஏ கிண்ண மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், ஆர்சனல், 2-1 என்ற கோல் கணக்கில் பிரஸ்டன் நோர்த் என்டைத் தோற்கடித்ததுடன், லெய்செஸ்டர் சிற்றி, 2-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றனைத் தோற்கடித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .