2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

சிற்றி, யுனைட்டெட் வென்றன

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 03 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று (02) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

மன்செஸ்டர் சிற்றி, 2-1 என்ற கோல் கணக்கில் பேர்ண்லியைத் தோற்கடித்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ஜயேல் கிளிஷி, சேர்ஜியோ அக்ரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

மன்செஸ்டர் யுனைட்டெட், 2-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டைத் தோற்கடித்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, ஜுவான் மாத்தா, ஸல்டான் இப்ராஹிமோவிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

லிவர்பூல், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .