Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறிமியர் லீக் போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி, கிறிஸ்டல் பலஸ், வட்போர்ட், போர்ண்மௌத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதோடு, நோர்விச், எவேர்ட்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் வெஸ்ட் காம், ஸ்டோக் அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
மன்செஸ்டர் சிற்றி அணியானது, 2-1 என்ற கோல் கணக்கில் சுவான்சீ அணியைத் தோற்கடித்திருந்தது. போட்டியின் 26ஆவது நிமிடத்தில் சிற்றியின் வில்பிரைட் போனி பெற்ற கோலின் மூலம் அவ்வணி முன்னிலை பெற்றது. எனினும் சுவான்சீ அணியின் பபேடிம்பியின் கோமிஸ், இறுதிக் கணத்தில் பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமநிலையானது. எனினும் கெலேசி லெகாஞ்சோ பெற்ற கோலின் மூலம் வெற்றி பெற்ற சிற்றி, பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு சென்றது.
இதேவேளை மன்செஸ்டர் யுனைட்டெட் அணியானது, 2-1 என்ற கோல் கணக்கில் போர்ண்மௌத் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே போர்ண்மௌத் அணியின் ஜூனியர் ஸ்டான்சிலாஸ் கோலோன்றைப் பெற்று தனது அணிக்கு முன்னிலை வழங்கினார். எனினும், போட்டியின் 24ஆவது நிமிடத்தில் யுனைட்டெட்டின் மரௌனே பெலனி பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமனானது. எனினும் போட்டியின் 54ஆவது நிமிடத்தில் ஜோஸுவா கிங் பெற்ற கோலின் மூலம் போர்ண்மௌத் அணி வெற்றி பெற்றது.
ஏனைய போட்டிகளில், கிறிஸ்டல் பலஸ் அணியானது , 1-0 என்ற கோல் கணக்கில் சௌதாம்டன் அணியினையும் வட்போர்ட் அணியானது சந்தர்லேண்ட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது. நோர்விச், எவேர்ட்டன் அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல் ரீதியிலும் வெஸ்ட் ஹாம், ஸ்டோக் அணிகளுக்கிடையிலான போட்டியில் கோலெதுவும் பெறப்படாமல் சமநிலை ஆகியிருந்தது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago