2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

செல்சியைத் தொடரும் தோல்விகள்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 08 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த பருவகால இங்கிலாந்து பிறிமியர் லீக் கால்பந்தாடப் போட்டிகளில், தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்துவரும் தற்போதைய பிறிமியர் லீக் சம்பியன்களான செல்சி கால்பந்தாட்டக் கழகம் மேலுமொரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஸ்டோக் சிற்றி அணியுடனான போட்டியிலேயே, செல்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. இப்போட்டியில் ஸ்டோக் சிற்றி சார்பாக போட்டியின் 56ஆவது நிமிடத்தில் மார்க்கோ அர்ணன்டோவிக் பெற்ற அபாரமான கோலின் மூலமே அவ்வணி வெற்றி பெற்றிருந்தது.

கடந்த மாதம் இடம்பெற்ற வெஸ்ட் ஹாம் அணியுடனான போட்டியில், போட்டி அதிகாரிகளுடன் மொரின்ஹோ முரண்பட்டுக் கொண்டமை காரணமாக, ஒரு போட்டிக்கு அரங்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மொரின்ஹோ, இப்போட்டியை அணி ஹொட்டலில் இருந்தே கண்டுகளித்திருந்தார்.

தோல்விகளால் துவண்டிருக்கும் செல்சி அணியை, துரதிஷ்டமும் இப்போட்டியில் துரத்தியிருந்தது. பெட்ரோ அடித்த பந்தொன்று கோல்கம்பத்தில் பட்டு திரும்பியதோடு, ஸ்டோக் சிற்றியின் கோல்காப்பாளர் ஜக் புட்லானுடன் மோதுண்டு லொயிக் ரெமி வீழ்ந்தபோது பனால்டியும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விகளுடன் மொத்தமாக ஏழு தோல்வியைச் சந்தித்துள்ள செல்சி அணி, புள்ளிகள் அடிப்படையில் 16ஆம் இடத்துக்குச் சென்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .