2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஜடேஜாவுக்குத் தடை

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மாத காலப்பகுதியில் 6 அபராதப் புள்ளிகளைப் பெற்றதன் காரணமாகவே இவர் மீது ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 58 ஆவது ஓவரின் போது இலங்கை துடுப்பாட்ட வீரர் மலிந்த புஷ்பகுமார மீது ஆபத்தான முறையில் பந்தை எறிந்தார் என்ற குற்றச்சாட்டு ஜடேஜா மீது முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடனான போட்டியின் போது பிட்ச் நடுவே, சேதம் விளைவிக்கும் வகையில் ஓடினார் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தது.

இவற்றை கருத்திற்கொண்டு அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் இன்னும் 2 அபராதப் புள்ளிகளை அவர் பெற்றுக்கொள்வராயின், 2 டெஸ்ட் அல்லது, 4 ஒருநாள் போட்டிகள், 4 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .