Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணிக்கான பயிற்றுநர், இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல்கள் முடிவடைந்த பின்னரே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரியிலேயே இத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதற்குப் பின்னரே இது தொடர்பான முடிவு எடுக்கப்படுமெனத் தெரிகிறது.
இலங்கை அணியின் பயிற்றுநராக இருந்த மார்வன் அத்தப்பத்து பதவி விலகியதையடுத்து, புதிய பயிற்றுநருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதில் கிடைக்கப்பெற்ற 5 விண்ணப்பங்களிலும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு திருப்தியிருக்காத நிலையில், வேறு இருவரை அச்சபை அணுகியுள்ளது.
எனினும், இடைக்கால நிர்வாகச் செயற்குழுவே தற்போது காணப்படும் நிலையில், இலங்கையின் பயிற்றுநராக வருவதில் அவர்களிருவரும் தயக்கம் காண்பிப்பதாக அறிவிக்கப்படுகின்றது. எனவே தான், புதிய நிர்வாக சபை தெரிவாகும் வரை, அது தொடர்பாக முடிவு எடுக்கப்படாது என்ற நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளதாதகத் தெரிகிறது.
இதன்படி, இலங்கையின் நியூசிலாந்துச் சுற்றுலாவுக்கும், இடைக்காலப் பயிற்றுநரான ஜெரோம் ஜயரத்னவே தொடர்ந்தும் பயிற்றுநராகச் செயற்படவுள்ளார்.
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago