2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஜுவென்டஸிலிருந்து வெளியேறும் புபான்

Shanmugan Murugavel   / 2021 மே 11 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸிலிருந்து பருவகால முடிவில் விலகவுள்ளதாக, அக்கழகத்தின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி புபான் தெரிவித்துள்ளார்.

2001ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை ஜுவென்டஸுக்காக விளையாடியிருந்த 43 வயதான புபான், பின்னர் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்குச் சென்று, கடந்த 2019ஆம் ஆண்டு ஜுவென்டஸுக்கு மீளத் திரும்பியிருந்தார்.

ஜுவென்டஸுக்காக 525 போட்டிகளில் விளையாடியுள்ள புபான், 10 சீரி ஏ பட்டங்களையும், நான்கு இத்தாலியக் கிண்ணங்களையும் வென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .