2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜோக்கோவிச்சை தோற்கடித்தார் பெடரர்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 18 , மு.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்று வரும் தொழில் முறை டென்னிஸ் வீரர்களுக்கான கூட்டமைப்பின் சுற்றுத் தொடரின் இறுதிகளில், உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசையில் மூன்றாமிடத்தில் உள்ள சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தோற்கடித்து, தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்குள் நுழைந்துள்ளார்.

ஜப்பானின் கெய் நிஷிகோரியுடனான ஒரு போட்டி மீதமுள்ள நிலையிலேயே பெடரர் அரையிறுதிப் போட்டிகளுக்கு நுழைந்துள்ளதோடு, மறு கணம், தனது இறுதி குழுநிலைப் போட்டியில் தோமஸ் பேர்டிச்சை சந்திக்கவுள்ள ஜோக்கோவிச், அரையிறுதிப் போட்டிகளில் நுழைவதற்கான வாய்ப்புகக்ளை கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியில் பெற்ற தோல்வி மூலம், உள்ளக அரங்குகளில் தொடர்ச்சியாக மூன்றாண்டுகளாக 38 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த ஜோக்கோவிச்சின் பயணம் நிறைவுக்கு வந்தது. தவிர, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சின்சினாட்டி பகிரங்க தொடரின் இறுதிப் போட்டியில், பெடரரிடம் தோல்வியடைந்த பின் தற்போதே தோல்வியடைந்துள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .