Shanmugan Murugavel / 2015 நவம்பர் 17 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
உலகின் வேகமான ஆடுகங்களில் ஒன்றாகக் கருதப்படும் பேர்த் மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்ற போதிலும், தட்டையான ஆடுகளம் காரணமாக, ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியாக அமைந்தது.
321 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டி முடிவுக்கு வந்தது.
துடுப்பாட்டத்தில் ரொஸ் டெய்லர் 36 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸன் 32 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
பந்துவீச்சில், இறுதிப் போட்டியில் விளையாடிய மிற்சல் ஜோன்சன், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முன்னதாக, 2 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 5ஆவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 385 ஓட்டங்களைப் பெற்று தனது இனிங்ஸை இடைநிறுத்தி, நியூசிலாந்துக்கு வாய்ப்பை வழங்கியது.
துடுப்பாட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் 138, அடம் வோஜஸ் 119, பீற்றர் நெவில் 35, மிற்சல் ஜோன்ன் 29, மிற்சல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, டேவிட் வோணர் (253), உஸ்மான் கவாஜா (121) ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் 9 விக்கெட்டுகளை இழந்து 559 ஓட்டங்களைப் பெற்றது. மார்க் கிறெய்க் 3, டக் பிரேஸ்வெல், மற் ஹென்றி, ட்ரென்ட் போல்ட்ற் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, றொஸ் டெய்லர் (290), கேன் வில்லியம்ஸன் (166) ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 624 ஓட்டங்களைப் பெற்றது.
இப்போட்டியின் நாயகனாக, றொஸ் டெய்லர் தெரிவானார்.
9 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
33 minute ago