Editorial / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி20 உலககோப்பை போட்டிக்காக இந்தியா வர பயமாக இருக்கிறது. நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம். எங்களின் போட்டியை வங்கதேசத்துக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் சார்பில் ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 7 ம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது. மார்ச் 8 ம் திகதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது.
ஆண்களுக்கான உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 7 ம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது. மார்ச் 8 ம் திகதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது.
இந்நிலையில் தான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டோம். எங்களுக்கான அனைத்து போட்டியையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் சபை ஐசிசிக்கு, ஞாயிற்றுக்கிழமை (04) அன்று கடிதம் எழுதி உள்ளது.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: ‛‛தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் வங்கதேச அணியினரின் பாதுகாப்பு தொடர்பான கவலை அதிகரித்துள்ளது. இதனால் வங்கதேச அரசின் ஆலோசனை கருத்தில் கொண்டு எங்கள் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யாது.
இதனால் வங்கதேசத்தின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு இடத்துக்கு மாற்ற வேண்டும். வங்கதேச வீரர்கள், அணியின் பிற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை பாதுகாப்பதற்கும், போட்டி சுமூகமாக நடப்பதற்கும் இத்தகைய நடவடிக்கை அவசியம்'' என கோரிக்கை வைத்துள்ளது.
11 minute ago
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
50 minute ago
3 hours ago