Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மே 13 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருடாந்த இற்றைப்படுத்தலையடுத்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான, அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்தில் இந்தியாவும், இரண்டாமிடத்தில் நியூசிலாந்தும் காணப்படுகின்றது.
இந்நிலையில், நான்காமிடத்திலிருந்து மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளதுடன், எட்டாமிடத்திலிருந்து ஆறாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் முன்னேறியுள்ளது.
அவுஸ்திரேலியாவுடனான 2017-18ஆம் ஆண்டு 0-4 தோல்வியானது தரவரிசைப் புள்ளிகளிலிருந்து விடுபட்டதையடுத்தே மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.
தற்போது, கடந்தாண்டு மே மாதத்திலிருந்தான போட்டிகளின் முடிவுகள் 100 சதவீதம் தரப்படுத்தப்படுவதுடன், முன்னைய இரண்டு ஆண்டுகளின் முடிவுகள் 50 சதவீதமே தரப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷுக்கெதிரான தொடரை 2-0 என வென்றதுடன், இலங்கையுடனான தொடரை 0-0 எனச் சமப்படுத்திய நிலையிலேயே ஆறாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் முன்னேறியுள்ளது.
முதல் 10 அணிகளின் தரவரிசை பின்வருமாறு,
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago