2025 ஜூன் 28, சனிக்கிழமை

டொட்டென்ஹாமை விட்டு வெளியேறும் கேன்?

Shanmugan Murugavel   / 2021 மே 18 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரரான ஹரி கேன், கழகத்தை விட்டு வெளியேற விரும்புவதாக கழகத்துக்கு கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிறீமியர் லீக்கில் தொடருவதையே கேன் விரும்புவதாகக் கூறப்படுகின்ற நிலையில், பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட், மன்செஸ்டர் சிற்றி, செல்சி ஆகியன கேனின் பிரதிநிதிகளிடம் விருப்பத்தை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, கேனை 150 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கே டொட்டென்ஹாம் விற்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், குறித்த தொகையை குறித்த கழகங்கள் வழங்குமா என்பது சந்தேகமாகவுள்ளது.

பிறீமியர் லீக்கில் 243 போட்டிகளில் 165 கோல்களை கேன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டொட்டென்ஹாமுடனான ஒப்பந்தத்தில் இன்னும் மூன்று ஆண்டுகளை கேன் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .