Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 27 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டென்னிஸ் வரலாற்றில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை, பரிசுப் பணமாக வென்ற முதலாவது வீரராக மாறுவதற்கு, உலகின் முதல்நிலை வீரர் நொவக் ஜோக்கோவிச்சும், முன்னாள் முதல்நிலை வீரரும் தற்போதைய மூன்றாம் நிலை வீரருமான ரொஜர் பெடரரும், போட்டியை எதிர்கொண்டுள்ளனர்.
28 வயதான ஜோக்கோவிச், 94 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பரிசுப் பணமாக வென்றுள்ளார். ஜோக்கோவிச்சை விட 6 வயது அதிகமான ரொஜர் பெடரர், 97.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பரிசுப் பணமாகக் கொண்டுள்ளார்.
அடுத்தாண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் வெற்றியாளருக்கு, 3.85 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள், பரிசுப் பணமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரை பெடரர் வெற்றிகொண்டால், 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மைல்கல்லை முதலில் அடைந்துகொள்வார்.
மாறாக, முதல்நிலை வீரரான ஜோக்கோவிச், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள 4 பகிரங்க டென்னிஸ் தொடர்களிலும் சிறப்பாகச் செயற்படும் வாய்ப்புள்ள நிலையில், இந்த மைல்கல்லை இலகுவாக அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, யார் முதலில் அடைவது என்பதில், கடுமையான போட்டி நிலவுகின்றது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago