Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் விதிகளுக்கு முரணாகச் செயற்பட்டு, பந்தைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவர் ஃபப் டு பிளெஸிக்கு விதிக்கப்பட்ட தண்டனை, மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தண்டனைக்கெதிராக அவர் மேற்கொண்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே, இத்தண்டனை உறுதியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இடம்பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில், வாயில் இனிப்பொன்றை வைத்தவாறு, பந்தை மினுக்கும் காணொளி வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, போட்டி ஊதியத்தின் 100 சதவீதமும், அபராதமாக விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கெதிராக, டு பிளெஸி, மேன்முறையீடு செய்தார். ஐ.சி.சி நடத்தை ஆணைக்குழுவின் முன்னால் இந்த விசாரணை இடம்பெற்றது.
இதில், தனது குற்றத்தை டு பிளெஸி ஏற்றுக் கொள்கின்ற நிலையில், வழங்கப்பட்ட தீர்ப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. பந்தைச் சேதப்படுத்துதல் தொடர்பான விதிகளில் தெளிவின்மை காணப்படுகிறது என்ற டு பிளெஸி தரப்பின் வாதம், நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டால், டு பிளெஸிக்கு போட்டித்தடை விதிக்கப்படக்கூடிய ஆபத்து இருந்தாலும், அந்த ஆபத்திலிருந்து அவர் தப்பித்துக் கொண்டார்.
6 hours ago
9 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago
17 Apr 2026