Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறிமியர் லீக் அணிகளில் ஒன்றான டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து கரி கேர்ஸ்டன் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், மூன்று வருடகால ஒப்பந்தத்தில் கரி கேர்ஸ்ட்டன் டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், தற்போது இரண்டு பருவகாலங்களுக்கு மாத்திரம் கடமையாற்றிய நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கரி கேர்ஸ்டனின் தலைமையின் கீழ், 28 போட்டிகளில் ஏழு போட்டிகளில் மட்டுமே டெல்லி டெயார்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றிருந்ததோடு 20 போட்டிகளில் தோல்வியடைந்து, 2014ஆம் ஆண்டு ஐ.பி.எல் புள்ளிகள் தரவரிசையில் இறுதியிடத்தை அடைந்ததுடன், 2015ஆம் ஆண்டு இறுதிக்கு முதலிடத்தையே பெற்றிருந்தது.
கரி கேர்ஸ்ட்டனை பிரதீயீடு செய்பவர் குறித்து இதுவரை அணி தீர்மானிக்கவில்லை என டெல்லி டெயார்டெவில்ஸின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹேமந் துவா தெரிவித்தார்.
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago