2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

டெஸ்ட் அணியில் ஹேரத்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிவிக்கப்பட்ட விருதுகளுக்கு மேலதிகமாக, 2016ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளும் அறிவிக்கப்பட்டன. இதில், டெஸ்ட் அணியில் இடம்பெற்ற ரங்கன ஹேரத் மாத்திரமே, இலங்கையின் ஒரே வீரராக உள்ளார்.

டெஸ்ட் அணி:

டேவிட் வோணர், அலஸ்டெயர் குக் (தலைவர்), கேன் வில்லியம்ஸன், ஜோ றூட், அடம் வோஜஸ், ஜொனி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், இரவிச்சந்திரன் அஷ்வின், ரங்கன ஹேரத், மிற்சல் ஸ்டார்க், ஸ்டீவன் ஸ்மித் (12ஆவது வீரர்)

கேள்விக்குரிய உள்ளடக்கம்: டேல் ஸ்டெய்ன் - இக்காலப்பகுதியில் அவர், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2ஆவது அதிகூடிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களான இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவேர்ட் ப்ரோட் (இருவரும் தலா 50 விக்கெட்டுகள்) இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

ஒ.நா.ச.போட்டி அணி:

டேவிட் வோணர், குயின்டன் டீ கொக், றோகித் ஷர்மா, விராத் கோலி (தலைவர்), ஏபி.டி.வில்லியர்ஸ், ஜொஸ் பட்லர், மிற்சல் மார்ஷ், இரவீந்திர ஜடேஜா, மிற்சல் ஸ்டார்க், கஜிஸ்கோ றபடா, சுனில் நரைன், இம்ரான் தாஹிர் (12ஆவது வீரர்)

கேள்விக்குரிய உள்ளடக்கம்: ஜடேஜா - இக்காலப்பகுதியில் 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அவர், 85.66 என்ற சராசரியில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்றியுள்ளார். துடுப்பாட்டத்தில், 4 இனிங்ஸ்களில் 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளார்.

கேள்விக்குரிய வெளியேற்றம்: அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களின் வரிசையில் முதலிரு இடங்களிலும் உள்ள ஜோ றூட், அலெக்ஸ் ஹேல்ஸ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .