Shanmugan Murugavel / 2021 ஜூன் 09 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, சென். லூசியாவில் நாளை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஆறாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும், ஏழாமிடத்தில் தென்னாபிரிக்காவும் காணப்படுகின்றது.
இந்நிலையில், இத்தொடரை வென்றால் ஆறாமிடத்துக்கு தென்னாபிரிக்கா முன்னேற, ஏழாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் கீழிறங்கும். மாறாக, தொடரை தென்னாபிரிக்கா இழந்தால் எட்டாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சைப் பொறுத்த வரையில் இரண்டு அணிகளும் சமபலத்தை உடையவையாக காணப்பட்டாலும், டீன் எல்கர் தலைமையிலான தென்னாபிரிக்காவின் புதிய டெஸ்ட் அணி, தெம்பா பவுமா, குயின்டன் டி கொக், றஸி வான் டர் டுஸனை உள்ளடக்கி துடுப்பாட்டத்தில் பலமானதாகக் காணப்படுகின்றது.
3 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 hours ago
5 hours ago