2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறிய றபாடா

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு, தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கெதிரான முதலிரண்டு ODI போட்டிகளிலும் இரண்டு விக்கெடுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தை றபாடா அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ட்ரெண்ட் போல்ட்ட், 2. முஜீப் உர் ரஹ்மான், 3. மற் ஹென்றி, 4. ஜஸ்பிரிட் பும்ரா, 5. ககிஸோ றபாடா, 6. மெஹிடி ஹஸன் மிராஸ், 7. கிறிஸ் வோக்ஸ், 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. பற் கமின்ஸ், 10. மொஹமட் ஆமிர்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராட் கோலி, 2. பாபர் அஸாம், 3. ரோஹித் ஷர்மா, 4. றொஸ் டெய்லர், 5. ஆரோன் பின்ஞ், 6. ஜொனி பெயார்ஸ்டோ, 7. பப் டு பிளெஸி, 8. டேவிட் வோணர், 9. ஷே ஹோப், 10. குயின்டன் டி கொக்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. பென் ஸ்டோக்ஸ், 3. மொஹமட் நபி, 4. கிறிஸ் வோக்ஸ், 5. ரஷீட் கான்.

இதேவேளை, பங்களாதேஷுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதி, ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. தப்ரையாஸ் ஷம்சி, 2. ரஷீட் கான், 3. அஸ்தன் அகர், 4. அடில் ரஷீட், 5. முஜீப் உர் ரஹ்மான், 6. டிம் செளதி, 7. அடம் ஸாம்பா, 8. இஷ் சோதி, 9. லக்‌ஷன் சந்தகான், 10. வனிடு ஹஸரங்க.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. டேவிட் மலன், 2. ஆரோன் பின்ஞ், 3. பாபர் அஸாம், 4. டெவோன் கொன்வே, 5. விராட் கோலி, 6. லோகேஷ் ராகுல், 7. றஸி வான் டர் டுஸன், 8. கிளென் மக்ஸ்வெல், 9. மார்டின் கப்தில், 10. ஹஸரத்துல்லா ஸஸாய்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. கிளென் மக்ஸ்வெல், 4. றிச்சர்ட் பெரிங்டன், 5. ஷோன் வில்லியம்ஸ்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .