Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எதிர்வரும் சனிக்கிழமை (08) ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவான் விலகியுள்ளார்.
குறைந்தது 15 நாட்கள் வரையில் எடுக்கும், இடது பெருவிரலில் ஏற்பட்டுள்ள மிகச் சிறிய முறிவு காரணமாகவே தவான் விலகியுள்ளார். தவானுக்கு பதிலாக, மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான கருண் நாயர், குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கான்பூரில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளான லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட கௌதம் கம்பீர், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago