Editorial / 2024 ஜூன் 02 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகள் தாய்வானின் தாய்பேயில் நடைபெறுகின்றது. இந்த மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு பல வெற்றிகள் கிடைத்தன.
மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பாக தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகியோர் பங்கேற்றனர்.
52.48 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்த தருஷி கருணாரத்ன முதலிடம் பெற்றார். 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அவர் பதிவு செய்த சிறந்த வெற்றி இதுவாகும்.
53.93 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்த நதீஷா ராமநாயக்க நான்காம் இடத்தை பெற்றார். ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியின் வெற்றி இலங்கையின் அருண தர்ஷன வசமானது. அவர் 45.82 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்தார்.
இலங்கையின் கயந்திக்கா அபேரத்ன 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். அவர் 4 நிமிடங்கள் 24.66 விநாடிகளில் போட்டித் தூரத்தை கடந்தார்.
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025