Shanmugan Murugavel / 2024 ஜூன் 04 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான குழு டி போட்டியில் இலங்கை தோற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் வனிடு ஹசரங்க தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, அட்னைல் பட்மன், அன்றிச் நொர்கியா (4), கேஷவ் மஹராஜ் (2), ககிஸோ றபாடாவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 77 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு 78 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, நுவான் துஷார, தசுன் ஷானக, ஹசரங்கவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக நொர்கியா தெரிவானார்.
24 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
3 hours ago