Editorial / 2017 ஜூன் 26 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, அந்தத் தொடரை, 2-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது.
கார்டிப்பில் இடம்பெற்ற 3ஆவது போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.
13 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்த அவ்வணி, 2ஆவது விக்கெட்டுக்காக 105 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இறுதி 5 விக்கெட்டுகளும் 15 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதிலும், போட்டித் தன்மையான ஓட்ட எண்ணிக்கையை, அவ்வணி பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர் டேவிட் மலன் 78 (44), அலெக்ஸ் ஹேல்ஸ் 36 (28), ஜொஸ் பட்லர் 31 (22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டேன் பற்றெர்ஸன் 4, அன்டிலே பெக்லுவாயோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
182 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களுடன் தடுமாறியதோடு, இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று, 19 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் மங்கலிஸோ மொசேலி 36 (22), ஏபி டி வில்லியர்ஸ் 35 (19), ஜே.ஜே. ஸ்மட்ஸ் 29 (30), அன்டிலே பெக்லுவாயோ ஆட்டமிழக்காமல் 27 (20) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 3, டொம் குரான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, மலன் தெரிவானார்.
21 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago