Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 15 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது, கன்பெராவில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், முதலிரண்டு போட்டிகளில் இலங்கை தோற்ற நிலையில் தொடர் தோல்வியைத் தவிர்ப்பதற்கு இப்போட்டியில் வென்றாக வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.
இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக தொடரிலிருந்து அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் விலகிய நிலையில், அவரை அணியில் மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையணியில் தனுஷ்க குணதிலகவை தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறிய குசல் மென்டிஸ் பிரதியிடவுள்ளார்.
இலங்கையணியின் பந்துவீச்சானது சிறப்பாகக் காணப்படுகின்ற நிலையில், துடுப்பாட்டமானது பதும் நிஸங்கவைத் தவிர்ந்த ஏனையோர் மேம்பட வேண்டியுள்ளது.
அவுஸ்திரேலிய அணியில் கேன் றிச்சர்ட்ஸனை ஜஹை றிச்சர்ட்ஸன் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .