2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

தொடரைக் கைப்பற்றியது இலங்கை

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 05 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், முதில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை குறுக்கிட்டது. அதன் பின்னர் போட்டி, 38 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுத் தொடர்ந்தது. அதன் பின்னர், 37.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், ஜோன்சன் சார்ள்ஸ் 83 (98), மார்லன் சாமுவேல்ஸ் 63 (88) ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில் லசித் மலிங்க, மிலிந்த சிரிவர்தன இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

டக் வேர்த் ஸ்டேர்ஸ் முறையில், 38 ஓவர்களில் 225 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 2ஆவது விக்கெட்டுக்காக குசால் பெரேரா - லஹிரு திரிமான்ன ஜோடி பகிர்ந்த 150 ஓட்டங்களின் துணையோடு 36.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து, வெற்றிபெற்றது.

இவ்வாண்டில், ஒ.நா.ச போட்டிகளில் பெறப்பட்ட 3ஆவது 99 ஓட்டங்களைப் பெற்ற குசால் பெரேரா, அவ்வாறு ஆட்டமிழந்த நான்காவது இலங்கை வீரராக மாறினார். லஹிரு திரிமான்ன, ஆட்டமிழக்காமல் 81 (95 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டியின் நாயகனாக, குசால் பெரேரா தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .