Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணியானது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதின்மூன்று பேர் கொண்ட குழாமாகவே, இந்தக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழாமில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அணியில் இடம்பெற்றிருந்த டனி விலாஸ், குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தவிர, குழாமில் டீ கொக்கும் பெயரிடப்பட்டிருக்கமையால், முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விக்கெட்காப்பாளராக டீவில்லியர்ஸே கடமையாற்றவுள்ளார்.
தவிர, காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர், வேர்ணன் பிலாந்தர், முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்காத நிலையில், குழாமில் வேகப்பந்துவீச்சாளர்களாக, டேல் ஸ்டெயின், மொர்னே மோர்க்கல், கைல் அபோட், கஜிஸ்கோ ரபடா ஆகியோர் இடம்பெற்றுள்ளதோடு, சுழற்பந்துவீச்சாளர்களாக குழாமில் டேன் பீடிட் மட்டுமே இடம்பெற்றுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இம்ரான் தாகிர், சைமன் ஹார்மர் ஆகியோர் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
இதேவேளை, இந்தியாவுடான இறுதி டெஸ்ட் போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்டியான் வான் ஸில்லும் குழாமில் இடம்பெற்றுள்ளார். இவர், ஆரம்ப ஸ்தானத்துக்கு மீளத் திரும்பவுள்ள நிலையில், டெம்பா பவுமா, மத்தியவரிசைக்கு திரும்பவுள்ளார்.
தென்னாபிரிக்க குழாம்: ஹஷிம் அம்லா (தலைவர்), ஏ.பி.டீவில்லியர்ஸ் (விக்கெட் காப்பாளர்), கைல் அபோட், டெம்பா பவுமா, ஜெ.பி. டுமினி, பப் டு பிலிசிஸ், டீன் எல்கர், மோர்னே மோர்க்கல், டேன் பீடிட், கஜிஸ்கோ ரபடா, ரீலி ரொஸோ, டேல் ஸ்டெயின், ஸ்டியான் வான் ஸில்
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago