2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிராக இந்தியா முழு ஆதிக்கம்

Gopikrishna Kanagalingam   / 2015 நவம்பர் 14 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல்நாள் முடிவில், இந்திய அணி முழுமையாக ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
 
பெங்களூர் எம். சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்பத்திலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி சார்பாக, தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏபி டி வில்லியர்ஸ் மாத்திரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏபி டி வில்லியர்ஸ் 105 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, டீல் எல்கர் 38 ஓட்டங்களையும் மோர்னி மோர்க்கல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் வருண் ஆரொன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி, இன்றைய நாள் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று, முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் முரளி விஜய் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .